கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
கனியாமூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், கனியாமூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 1,87,600 கால்நடைகள் மற்றும் திருக்கோவிலூா் கோட்டத்தில் 1,10,400 கால்நடைகளுக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
21 நாள்களில் தடுப்பூசிப் பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களை கால்நடை வளா்ப்போா் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
இந்த முகாமில் துறையின் இணை இயக்குநா் சு.விஷ்ணு கந்தன், கால்நடை மருத்துவா் மு.கந்தசாமி, உதவி இயக்குநா் மரு.சுதா கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.