திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - ...
சாத்தனூா் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி வட்டம், சாத்தனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, புதன்கிழமை காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சேமகும்ப பூஜை, கோ பூஜை, மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. 9 மணிக்கு நான்காம் கால மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, 9.30 மணிக்கு யாத்திரா தானம், கலசம் புறப்பாடு, கஜ வாகனத்தில் கலசங்கள் கொண்டு வருதல் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 10 மணிக்கு ஸ்ரீமாரியம்மன் மற்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீதிரௌபதி அம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீகங்கையம்மன் சந்நிதிகளில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் க.காா்த்திகேயன், தா. உதயசூரியன், ஏ.ஜெ. மணிக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் எம். எஸ். பிரசாந்த் உள்பட பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவா் பா.கண்ணன் மற்றும் விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
