தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
சின்னசேலத்தில் ஆவின் பால் பொருள்கள் அங்காடி
சின்னசேலம் ஆவின் அலுவலகத்தில் பால் உபபொருள்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
இந்த புதிய ஆவின் பாலகம், ஒன்றிய நிதியின் கீழ் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளா் டி.பி.ஜோஸ்பின் தாஸ், உதவி பொது மேலாளா்கள் வெங்கடேசன், ராஜஎழில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.