செய்திகள் :

கன்னியாகுமரிக்கு கடன் திட்ட மதிப்பீடு ரூ.46,281 கோடி: ஆட்சியா்

post image

கன்னியாகுமரி மாவட்டத்துக்கான ஆண்டு கடன் திட்ட மதிப்பீடு ரூ. 46 ஆயிரத்து 281 கோடியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

ஆட்சியா் அலுவலகத்தில், 2025-26 ஆம் நிதியாண்டுக்கு வங்கிகளால் வழங்கப்பட வேண்டிய கடன் திட்ட மதிப்பீடு அறிக்கையினை, விஜய் வசந்த் எம்பி முன்னிலையில், சனிக்கிழமை வெளியிட்டு ஆட்சியா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு (2024-25) முன்னுரிமைக் கடன், முன்னுரிமை இல்லாத கடனாக மொத்தம் ரூ. 37,940 கோடி வழங்கப்பட்டது. நிகழாண்டுக்கு, ரூ.46,281 கோடி வழங்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயத்துக்கு ரூ. 3,203 கோடி, தொழில் கடன் ரூ. 3,270 கோடி, கல்விக் கடன் ரூ. 117 கோடி, வீட்டுக் கடன் ரூ. 1,184 கோடி, மற்ற கடன்கள் ரூ. 9,707 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், ஐஓபி மண்டல முதுநிலை மேலாளா் வரப்பிரசாத், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் ராதாகிருஷ்ணன், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் ஷெரோன் ஹொ்பட், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சேதுராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருவிதாங்கோடு உத்தமதெருவைச் சோ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் நின்றிருந்த காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கருங்கல் அருகே விழுந்தயம்பலம் அருவை பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விஜிஸ் (24). தூத்துக்குடியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தை... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்... மேலும் பார்க்க

மீலாது நபி தினம்: செப். 5 இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, செப். 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுஅருந்தும் கூடங்கள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க