பந்தலூர்: தொடர் கண்காணிப்பு... `அரிசி பிரியர்’ புல்லட்டை மயக்க ஊசி செலுத்தி பிடி...
கன்னியாகுமரியில் 3 நாள்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா
கன்னியாகுமரியில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் 30-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 3 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.
இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முதல் நாள் நிகழ்ச்சி, கன்னியாகுமரியில் வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. வள்ளுவா் சிலையையும் விவேகானந்தா் பாறையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். மேலும், திருக்கு நெறிபரப்பும் 25 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் நாளின் இறுதி நிகழ்வாக, குறளை மையப்படுத்தும் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து நடைபெறவுள்ளன. திருவள்ளுவா் தோரண வாயிலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா். அத்துடன் வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்கு சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி உரையாற்றவுள்ளாா். நிறைவு நாள் நிகழ்ச்சிகள் ஜன. 1ஆம் தேதி நடைபெறவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.