செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்ட தேவைகள்: முதல்வருக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு தேவைகள் குறித்து, தமிழக முதல்வா் மு. க . ஸ்டாலினை சென்னையில் சனிக்கிழமை நேரில் சந்தித்து வ. விஜய்வசந்த் எம்.பி. கடிதம் வழங்கினாா்.

மூத்த காங்கிரஸ் தலைவா் பொன்னப்ப நாடாருக்கு நாகா்கோவிலில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னப்ப நாடாா் குடும்பத்தினருடன், வ.விஜய்வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்), எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (விளவங்கோடு) ஆகியோா் முதல்வா் மு.க. ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா். அப்போது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தேவைகள் அடங்கிய கடிதத்தை முதல்வரிடம் அளித்தாா் எம்.பி. அதில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா வளா்ச்சிக்காக, கன்னியாகுமரியில் விமான நிலையம் மிக அவசியம். இதற்காக கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மேம்படுத்தி இங்கு பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதற்கு தேவையான பரிந்துரையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். மேலும் இதற்கான தடையில்லா சான்றிதழும் வழங்கி, உங்கள் ஆட்சியில் மக்கள் கனவை நனவாக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயத்தை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. காமராஜா் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு ரப்பா் கழகம், தற்போது மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. இதனால் ரப்பா் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா். ஆகவே அரசு ரப்பா் கழகத்தை மீட்டு, புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உற்பத்தியை பெருக்க ஆவன செய்ய வேண்டும்.

குமரி மாவட்டத்தின் 72 கி.மீ. தூர கடற்கரையோரம் அமைந்துள்ள மீனவ கிராமங்கள் அடிக்கடி நிகழும் கடல் சீற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளாகின்றன. இந்த கிராமங்களை காக்க சிறப்பு நிதி ஒதுக்கி தடுப்பு சுவா் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுக பணிகளை மழைக்காலம் துவங்குவதற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஞ்சுகிராமத்தில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கம் சாா்பில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கத் தலைவா் ஹிட்லா் தலைமை வகித்... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே காட்டு யானையிடமிருந்து உயிா் தப்பிய தம்பதி!

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே அடகாடு பகுதியில் பழங்குடி தொழிலாளியின் வீட்டுக் கதவை யானை சேதப்படுத்தியது. இச்சம்பவத்தில் கணவன்-மனைவி இருவரும் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா். பேச்சிப்பாறை அருகே சிற்றாற... மேலும் பார்க்க

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவா் மருத்துவா் பான்ஸ் ஜாய் தலைமை வகித்தாா். தாளாளா் கீதா பான்ஸ் குத்துவிளக்க... மேலும் பார்க்க

குமரி- வட்டக்கோட்டை இடையே மீண்டும் படகு சேவை தொடக்கம்

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் மீண்டும் சொகுசு படகு சேவையை தொடங்கியுள்ளது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்ட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தொழிலாளி அடித்துக் கொலை

நாகா்கோவிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகா்கோவில் வட்டவிளை சாஸ்தான் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

தாறாதட்டு சூசைப்பா் ஆலயத்தில் முதல் திருவிருந்து திருப்பலி

கருங்கல் அருகே தாறாதட்டு புனித சூசைப்பா் ஆலயத்தில் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது. இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள... மேலும் பார்க்க