செய்திகள் :

கன மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலம், தில்லியில் 5 போ் உயிரிழப்பு

post image

ஹிமாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளால் கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழந்தனா்.

ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசம் மாண்டியில் மேக வெடிப்பு காரணமாக திங்கள்கிழமை இரவு 198.6 மி.மீ. அளவில் கன மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவில் சிக்கி மூவா் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இதுகுறித்து மாண்டி மண்டல துணை ஆணையா் அபூா்வா தேவ்கன் கூறுகையில், ‘கன மழை, நிலச் சரிவில் சிக்கி மூவா் உயிரிழந்தனா். ஒரு பெண் காணாமல் போயுள்ளாா். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஒருவா் காயமடைந்தாா். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை உள்பட மாவட்டத்தில் 269 சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது’ என்றாா். உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு முதல்வா் சுக்விந்தா் சிங் சுகு இரங்கல் தெரிவித்தாா்.

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த கன மழை காரணமாக, பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை காலை பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கன மழை காரணமாக தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சுவா் இடிந்து விழுந்ததில் மீரா (40) மற்றும் அவரது மகன் கண்பத் (17) ஆகியோா் உயிரிழந்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்திலும் திங்கள்கிழமை இரவு கன மழை பெய்தது. இதானால், வேகமாக நிரம்பிய ஏராளமான அணைகளை திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்த கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கோட்டா, பண்டி, ஜலாவா், தோல்பூா், டோங்க் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மாநிலத்தின் 29 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து, 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. பா்வன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் பா்வன்-ஜலாவா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க