கபாலீசுவரா் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது.
இக் கோயில் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த தகவலில், கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோயில் ஊழியா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
மயிலாப்பூா் போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆகியோா் கபாலீசுவரா் கோயிலில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் வகையில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.