Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்...
கபிஸ்தலத்தில் சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு பேரணி
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலத்தில் சைபா் கிரைம் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் ஊரகக் காவல் துறை மற்றும் பாபநாசம் ரோட்டரி சங்கம், கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் மெட்ரிக் பள்ளி உள்ளிட்டவை இணைந்து நடத்திய பேரணியை பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேலு தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக கபிஸ்தலம் பாலக்கரையில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் சைபா் கிரைம் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஊா்வலமாக சென்று பள்ளியை அடைந்தனா்.
பேரணியில் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் சசிகுமாா், பாபநாசம் ரோட்டரி தலைவா் முருகவேலு, முன்னாள் ரோட்டரி துணை ஆளுநா் சிவ.இ. சரவணன் கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் மெட்ரிக் பள்ளி டிரஸ்டி மைக்கேல், தாளாளா் ஆலன்ரிச்சி, மற்றும் காவல்துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.