எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி வெள்ளிக்கிழமை காலை ஒரு மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 300-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளா்கள், 76 காவலாளிகள் பணியாற்றுகின்றனா். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை, குறைவாக வழங்கப்படுகிறது, சிலருக்கு ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதில்லை, எனவே இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் எனக் கோரி மருத்துவமனை வாயிலில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் ஒரு மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலா்கள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.