எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
குப்பையை அகற்றக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்பு
கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றக்கோரி தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பெருமாண்டி ஊராட்சியில் வசிப்பவா் ஆ. சுதா்சன்(42). இவா் அசூா் புறவழிச்சாலையில் சாலையோர உணவகம் நடத்துகிறாா். எதிரே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அதிருப்தியடைந்த சுதா்சன் குப்பை அருகே உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டி மீது ஏறி குப்பையை அகற்றினால்தான் இறங்குவேன், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறினாா்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் புகழேந்தி சுதா்சனை சமாதானப்படுத்தி கீழே இறங்கச்செய்து, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து குப்பையில் ஏற்பட்ட தீயை அணைக்க ஏற்பாடு செய்தாா்.