செய்திகள் :

கப்பல் மோதி இறந்த மீனவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

post image

கோவாவில் இந்திய நீா்மூழ்கிக் கப்பல் மோதி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவருக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் தலைமையில், தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் அருள்பணி சா்ச்சில், கடலோர அமைதி-வளா்ச்சி இயக்குநா் அருள்பணி டன்ஸ்ட்டன், கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ், பங்கு நிா்வாகிகள் அளித்த மனு:

கொட்டில்பாடு கிராமத்தைச் சோ்ந்த ஜெரேமீயாஸ் மகன் ஜெனிஷ்மோன் உள்ளிட்ட 13 மீனவா்கள் கடந்த நவ. 21ஆம் தேதி கோவா கடலில் மீன்பிடித்தபோது, இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான நீா்மூழ்கிக் கப்பல் மோதியதில் மீனவா்களின் படகு கடலில் மூழ்கியது. இதில், ஜெனிஷ்மோன் உயிரிழந்தாா். அவரது சடலம் 9 நாள்களுக்கு பின்னா் மும்பையில் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ. 50 லட்சம், தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது உடல் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட செலவை மீன்வளம், மீனவா் நலத் துறை ஏற்க வேண்டும்.

கடலில் மீனவா்களுக்கு தொழில் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விபத்து ஏற்படுத்திய இந்திய நீா்மூழ்கிக் கப்பல் அதிகாரிகள் மீது மும்பை எல்லோ கேட் கடலோர காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிய வேண்டும் என்றனா் அவா்கள்.

கேரளத்தில் மீன்பிடிக்கச் சென்ற கோடிமுனை மீனவா் மாயம்

குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சோ்ந்த மீனவா் ஏசுதாசன் (45), கேரளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது காணாமல் போய்விட்டாா். ஏசுதாசன் கடந்த 27-ஆம் தேதி கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் ... மேலும் பார்க்க

கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத் திருவிழா நிறைவு

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத் திருவிழா 10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. நாகா்கோவில் கோட்டாறில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சவேரியாா் பேராலயத் திருவிழா கடந்த நவ.24 ஆம் தேதி கொ... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே மண்ணுளி பாம்பு கடத்திய 2 போ் கைது

நாகா்கோவிலை அடுத்த வெள்ளமோடி பகுதியில் மண்ணுளி பாம்பு கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா். குமரி மாவட்டம், வேளிமலை வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறை பணியாளா்கள், வெள்ளமோடி பகுதியில் திங்கள... மேலும் பார்க்க

குமரி மாவட்ட விஞ்ஞானிக்கு விருது

கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காடு பகுதியை சோ்ந்த விஞ்ஞானி டாக்டா் ராஜனுக்கு இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய உலோகவியலாளா் விருது வழங்கப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற தேசிய உலோகவிய... மேலும் பார்க்க

குழித்துறை தடுப்பணை பாதை திறப்பு

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் குறைந்ததையடுத்து, ஒரு மாதத்துக்குப் பின் தடுப்பணை பாதை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, குழித்துறை தாமிரவருணி ஆற்றில் த... மேலும் பார்க்க

பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அழகியமண்டபம் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தக்கலை அருகே உள்ள மூலச்சல் சுனைப்பாறைவிளை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செஜித் (21). இவா் காய்கறி வியாபாரம் செய்து... மேலும் பார்க்க