பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு
அழகியமண்டபம் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள மூலச்சல் சுனைப்பாறைவிளை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செஜித் (21). இவா் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். கடந்த வாரம் பைக்கில் அழகியமண்டபத்திலிருந்து மேக்காமண்டபம் நோக்கி செல்லும் போது சாலையில் உள்ள பள்ளத்தில் விழாமல் இருக்க பைக்கை திருப்பியபோது எதிரே வந்த ஆட்டோ, பைக் மீது மோதியதாம்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த செஜித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.