நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
குழித்துறை தடுப்பணை பாதை திறப்பு
குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் குறைந்ததையடுத்து, ஒரு மாதத்துக்குப் பின் தடுப்பணை பாதை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தவாறு தண்ணீா் பாய்ந்தது. இதனால் தடுப்பணை பாதை கடந்த ஒரு மாதத்துக்கு முன் மூடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மழை தணிந்த நிலையில், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் குறைந்தது. இதைத் தொடா்ந்து தடுப்பணை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகளை பொதுப்பணித் துறையினா் அகற்றியதையடுத்து அப்பகுதி வழியாக செவ்வாய்க்கிழமைமுதல் இருசக்கர வாகன போக்குவரத்து துவங்கியது.