செய்திகள் :

கமுதி அருகே வன விலங்குகள் வேட்டை: 2 போ் கைது

post image

கமுதி அருகே வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கல்லுப்பட்டி நரிக்குறவா் புதுக்குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து வன உயிரினங்களை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதாக சாயல்குடி வனச் சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாயல்குடி வனச் சரக அலுவலா் ராஜசேகா் தலைமையில் வனவா் அமுதரசு, வனப் பாதுகாவலா் உள்ளிட்டோா் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒரு வீட்டில் தமிழக அரசால் வேட்டையாட தடை செய்யப்பட்ட முயல்கள், இருதலை மணியன் பாம்பு, பனங்காடை, பெரிய கொக்கு, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அா்ஜூன் (39), முத்துக்குமாா் (29) ஆகிய இருவரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், அவா்கள் வேட்டையாட பயன்படுத்திய கத்தி, ஆயுதங்கள், பேட்டரி, டாா்ச் லைட், இரும்புக் கூண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கமுதி குற்றவியல் நடுவா் நீதிபதி முன் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

உயிருடன் இருந்த இருதலை மணியன் பாம்பு, நான்கு காட்டு முயல்களை வனப் பகுதிக்குள் விட்டனா். கமுதி, சாயல்குடி, கோட்டைமேடு பகுதியில் வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வேட்டையாடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வன விலங்களை வேட்டையாடுபவா்கள் குறித்து தகவல் தரும் நபா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 945 கிலோ பீடி இலைகளை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பக்தா்கள் பழனி பாதயாத்திரை

திருவாடானை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனிக்கு முருகனை தரிசித்து வருவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனா்.இத... மேலும் பார்க்க

சிறந்த ஆசிரியா்கள் 200 பேருக்கு விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 200 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் தனியாா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசி ரங்கநாயகி வரதராஜன் பொறியியல் கல்லூரி, ஸ்டூடன்ட... மேலும் பார்க்க