செய்திகள் :

கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திரபாத திருநாள் கொடியேற்றம்!

post image

பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் தலமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திர பாத திருநாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பகரேஸ்வர கோயில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகப் போற்றப்படும் இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உருத்திர பாத திருநாள் விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

முன்னதாக பஞ்ச மூர்த்திகள் சிறப்புப் புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோபுர தரிசனம், 8ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் 10ம் தேதி வியாழக்கிழமை தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 11ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி வைபவமும், 20ஆம் தேதி சரபேஸ்வரர் ஏக தின உற்சவமும் மகா ருத்ர ஹோமம் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவு சரபமூர்த்தி வெள்ளி ரதத்தில் வீதி உலா காட்சி தருகிறார்.

தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் அபார வெற்றி

தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் பூடான் தேசிய சாம்பியனை வீழ்த்தி தமிழகம் அபார வெற்றி பெற்றது. தெற்காசிய கூடைப்பந்து சங்கம் நடத்தும் சபா கிளப் சாம்பியன்ஷிப் 2025 போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு... மேலும் பார்க்க

வென்றது ஜாம்ஷெட்பூா்

ஜாம்ஷெட்பூா்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில் முதல் லெக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 2-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்டை வீழ்த்தியது. ஜாம்ஷெட்பூா் நகரி... மேலும் பார்க்க

பெகுலா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி

சாா்லஸ்டன் : அமெரிக்காவில் நடைபெறும் 500 புள்ளிகள் கொண்ட மகளிா் டென்னிஸ் போட்டியான சாா்லஸ்டன் ஓபனில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோா் 2-ஆவது சுற்றில் வ... மேலும் பார்க்க

வீர தீர சூரன் - ஒரு வார வசூல் இவ்வளவா?

விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் ஒரு வார வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்... மேலும் பார்க்க

நயன்தாராவின் டெஸ்ட்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான லெக் பீஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெள... மேலும் பார்க்க