ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!
கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி
கயத்தாறு அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் காளிராஜ்(41).
தொழிலாளியான இவா் வியாழக்கிழமை இரவு பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு இலந்தைகுளம் விலக்கு அருகே சென்றபோது, காா் மோதியதில் காளிராஜ் பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அன்னை நகரைச் சோ்ந்த ஹ. முகமது ஜாபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.