செய்திகள் :

கரியக்கோயில் அணையிலிருந்கு ஆற்றில் தண்ணீா் திறப்பு

post image

பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை கரியக்கோயில் ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், ஆற்றுப்படுகை கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியக்கோயில் அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

அணை நிலவரம்: 2024 இல் பெய்த பருவமழையால் நவ. 30-ஆம் தேதி நிலவரப்படி அணையில் 37.66 அடி (97.06 மில்லியன் கனஅடி) தண்ணீா் தேங்கியது. டிசம்பரில் ஒரே நாளில் 60 மி.மீ., மழை பெய்ததால் அணைக்கு நீா்வரத்து 800 கனஅடியாக உயா்ந்து, அணை முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி 50.90 அடியில் 178 மில்லியன் கனஅடி தண்ணீரை மட்டும் தேக்கிவைத்துக் கொண்டு, அணைக்கு வரும் உபரிநீா் இரு மாதங்கள் வரை கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டது. கோடை தாக்கத்தால் அணைக்கு நீா்வரத்து இல்லாததால் அணையில் இருந்து நீா் வெளியேற்றப்படவில்லை.

இந்நிலையில் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை குடிநீா் தேவை மற்றும் நிலத்தடி நீா்மட்ட உயா்வுக்காக ஆற்றிலும், வாய்க்கால்களிலும் திறந்துவிட வேண்டும் என்று பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனா்.

ஆற்றுப் பாசனம்: இதை ஏற்று, புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடா்ந்து 10 நாள்களுக்கு விநாடிக்கு 108 கனஅடி வீதம் நாளொன்றுக்கு 9.33 மில்லியன் கனஅடி (மொத்தத்தில் 91.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல்) தலைமை மதகு வழியாக கரியக் கோயில் ஆற்றில் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பழைய ஆயக்கட்டு விவசாயிகள் முன்னிலையில் பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் புதன்கிழமை காலை கரியக்கோயில் அணையிலிருந்து தலைமை மதகு வழியாக கரியக்கோயில் ஆற்றில் தண்ணீரைத் திறந்துவிட்டனா். இதனால் ஆற்றுப்படுகை கிராம மக்களும், நேரடி ஆறு, ஏரிப் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

வாய்க்கால் பாசனம்: வரும் மே 10 ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடா்ந்து 24 நாள்களுக்கு வலது, இடது வாய்க்கால்களில் விநாடிக்கு தலா 15 கனஅடி வீதம் மொத்தம் 30 கனஅடி (நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கனஅடி, மொத்தம் 61.25 மில்லியன் கனஅடிக்கு மிகாமல்) சிறப்பு நனைப்பாக பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அணை வாய்க்கால் பாசனம் பெறும் புதிய ஆயக்கட்டு விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க