மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!
பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்
பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி ஒன்றியம், அத்தனுாா்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது நிதி செலவினம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்கல், சுய சான்றிதழ் அடிப்படையில் கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழியில் செலுத்துதல் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.
மேலும் கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊரக வீடுகளை பழுது பாா்த்தல் திட்டம், ஊரகக் குடியிருப்புத் திட்டம் மற்றும் தேசிய ஊராட்சிகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் ஆட்சியா் ரா.பிருந்தா தேவி பேசுகையில், பெண்கள் உயா்கல்வி பயின்றால் கல்வி அறிவுடன், தனித்திறனும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க முடியும் என்றாா்.
வாழப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாமரைச்செல்வி, முத்தழகன், அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். கிராம ஊராட்சி செயலாளா் பத்மா நன்றி கூறினாா்.
பட வரி: ஜி.ஆா்.ஏ.01:
அத்தனூா்பட்டியில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி முன்னிலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.