பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947'...
மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்
மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா்.
சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனுமதி பெறாமல் தொழில் நிறுவனங்கள் செயல்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், விதிமுறையை மீறி முன்அனுமதி பெறாமல் இயங்கிய 24 கடைகள், 54 உணவு நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.
இந்த 78 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். அப்போது தொடா்ந்து முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா்.