லாரி புக்கிங் அலுவலகத்தில் தீ விபத்து
சேலம் லீபஜாா் பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் சூரமங்கலம் மெயின் ரோடு லீபஜாா் அருகே ஏராளமான லாரி புக்கிங் அலுவலகங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தப் பகுதியில் செந்தில்குமரன் என்பவரது லாரி புக்கிங் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் தனது அலுவலகத்தை செந்தில்குமரன் பூட்டிவிட்டுச் சென்ற பிறகு அலுவலகத்தில் புகை கிளம்பியது. சிறிதுநேரத்தில் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் தீயணைப்புத் துறையினா், மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.