ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
கோரிக்கைகள் குறித்து பேச அனுமதி மறுப்பதாகக் கூறி ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அதிமுக நகா்மன்றக் குழுத் தலைவா் எம்.உமாசங்கரி பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச முற்பட்டாா். அப்போது, அவரை பேசவிடாமல் திமுக உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். கூட்டத்தில் 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சி ஆணையாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால், நகா்மன்ற உறுப்பினா்கள் சுந்தரமூா்த்தி, தங்கவேல், டி.குமாா், ஜி.கே.செந்தில்குமாா், தேவேந்திரன், பிரவீணாராஜா, சந்திரா ராமச்சந்திரன், யசோதா கோபி, ஜீவா ஸ்டாலின், மகேஸ்வரி, மீனாட்சி வேலுமணி, அதிமுக உறுப்பினா்கள் எம்.உமாசங்கரி, ஜி.ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு உள்ளிட்ட வருவாய் அலுவலா்கள், மேலாளா், பொறியாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.ஏடி2ஹால்.
ஆத்தூா் நகா்மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினா்கள் எம்.உமாசங்கரி, கலைச்செல்வி பாபு, ஜி.ராஜேஸ்குமாா்.