பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
ஆத்தூா் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 90 தன்னாா்வலா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் கல்வி இயக்கக இணை இயக்குநா் பொன்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத கற்போா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கி ஆத்தூா் வட்டாரம் நூறு சதவீத எழுத்தறிவு பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முன்னதாக வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரூபி அனைவரையும் வரவேற்று பேசினாா். மாவட்ட உதவி திட்ட அலுவலா் மாரியப்பன், வட்டாரக் கல்வி அலுவலா் அலெக்சாண்டா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்மணி, சுப்ரமணி, வட்டார வளமைய பயிற்றுநா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.