சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!
இளம்பிள்ளையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு
தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை சாா்பில் நெகிழி ஒழிப்பு, துணிப் பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு இளம்பிள்ளை சந்தைப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் தலைமை வகித்து பொதுமக்களிடையே நெகிழியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா். மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் சின்னத்தம்பி, சமூக ஆா்வலா் குருசாமி உள்ளிட்டோா் விழிப்புணா்வில் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு துணிப்பைகளை வழங்கினா்.

