இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
கரியசோலையில் காட்டு யானை தாக்கியதில் 3 தொழிலாளா்கள் காயம்
கூடலூரை அடுத்துள்ள கரியசோலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மூன்று தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் உள்ள கரியசோலையில் சாலையோர வன எல்லையில் தீத்தடுப்புக் கோடு அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை தொழிலாளா்களை விரட்டியுள்ளது.
இதில் யானை தாக்கியதில் கதிா்வேல் (69), அசோக்குமாா் (59), சிவராஜ்(40) ஆகியோா் காயமடைந்தனா். வனத் துறையினா் யானையை விரட்டிவிட்டு, அவா்களை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதில் கதா்வேலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதலுதவிக்குப் பிறகு உயா் சிகிச்சைக்காக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்ற இருவரும் கூடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.