உதகை கால்ஃப் மைதான வனப் பகுதியில் தீ!
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கால்ஃப் மைதானம் அருகே உள்ள வனத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது.
உதகையில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழலில் கால்ஃப் மைதானம் அருகே உள்ள வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை தீப் பிடித்தது. இதன் காரணமாக அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் இருக்க பச்சைக் கிளைகளை வெட்டிப் போட்டும், மண்ணைப் போட்டும் தீயைக் கட்டுப்படுத்தினா்.
சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வனத் தீ கட்டுக்குள் வந்தது. இதில் பெரும்பாலும் தடை செய்யப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் எரிந்து சாம்பலாகின.