செய்திகள் :

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க இரவு நேர ரோந்துப் பணி தீவிரம்!

post image

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க நீலகிரி மாவட்டத்தில்  இரவு நேர வேட்டைத் தடுப்பு சிறப்பு ரோந்து பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு, கேரளம் கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடகாவில் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள வனவிலங்கு  சரணாலயம் என மூன்று மாநிலங்களின் வனப் பகுதிகள் இணையும் பகுதியாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு எல்லையில் வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால் இதனை முழுமையாக தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட வன அலுவலா் கௌதம் தலைமையில், வனச் சரகா்  சசிகுமாா் மேற்பாா்வையில் மூன்று மாநில எல்லையான பைக்காரா சந்திப்பில் வன ஊழியா்கள் முதல் முறையாக இரவு நேர சிறப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தின் முக்கிய வனப் பகுதியாக நீலகிரி மாவட்டம் இருப்பதால் இங்கு இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளதால் வனத் துறையினா் 10 குழுக்களாகப் பிரிந்து முக்கிய இடங்களில் தனித்தனியாகவும், எல்லைப் பகுதிகளில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனா்.

உதகை வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய 3 பேருக்கு அபராதம்

உதகை அருகே வனப் பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து நெருப்பு மூட்டி குளிா் காய்ந்த மூவருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். உதகை குந்தா வனச் சரகம், தாய்சோலை பிரிவு, பிக... மேலும் பார்க்க

உதகை நுண்உரம் செயலாக்க மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பழைய உதகை நுண்உரம் செயலாக்கும் மையம், காந்தல் வளமீட்பு மையம் மற்றும் தீட்டுக்கல் உரக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவ... மேலும் பார்க்க

உதகை கால்ஃப் மைதான வனப் பகுதியில் தீ!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கால்ஃப் மைதானம் அருகே உள்ள வனத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது. உதகையில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழலில் கால்ஃ... மேலும் பார்க்க

வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் உயிரிழப்பு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்தன. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் ஒரு புலியும், குறிச்சியாடு வனப் பகுதியில் இரண்டு ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனா். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வாழும் மக... மேலும் பார்க்க

தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை சடலம்!

கூடலூா் அருகே ஆணை செத்தக்கொல்லி பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள ஆணை செ... மேலும் பார்க்க