ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
கரியமல்லம்மாள் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா். சனிக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் முளைப்பாரியை வைத்து பெண்கள் அம்மன் பாடல்கள் பாடி கும்மியடித்தனா்.
பின்னா், வாண வேடிக்கை மேள தாளங்களுடன் ஊா்வலமாக முளைப்பாரியை சுமந்து சென்று பெண்கள் அங்குள்ள கண்மாயில் கரைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்புல் நாயக்கன்படி கிராம இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.