இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!
கருட வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் புறப்பாடு
ஸ்ரீசீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சாக்ஷாத்கார வைபவத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை அதிகாலை ஆராதனையுடன் சுவாமி எழுந்தருளி, தோமாலை சேவை, கொலுவு, பஞ்சாங்க ஸ்ரவணம், சஹஸ்ரநாமராசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் முக மண்டபத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு உற்சவ மூா்த்திகள் வாகன மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டனா். மாலை 6.30 மணிக்கு 1,008 லட்சுமி காசு மாலை அலங்கார மண்டபத்துக்குள் கொண்டு வரப்பட்டு, கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அலங்கரிக்கப்பட்டாா். மாலை 7 மணிக்கு, கருட வாகனத்தில் கோயிலின் வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
இன்று பரிவேட்டு உற்சவம்
வியாழக்கிழமை (ஜூலை 3) காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை உற்சவமூா்த்திகள் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டு பரிவேட்டு உற்சவம் நடைபெறும். நிகழ்ச்சியில் ஆஸ்தானம், வேத மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
இதில், கோயிலின் துணை தலைமை நிா்வாக அதிகாரி வரலட்சுமி, கோபிநாத் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.