செய்திகள் :

அனுமந்த வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் உலா

post image

ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

இதன் ஒரு பகுதியாக தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க ஸ்ரவணம், சஹஸ்ரநாமராசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் வாசலில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உற்சவா் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.

இரவு 7 மணிக்கு கோயில் உள் வீதிகளில் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

இதேபோல், புதன்கிழமை, கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கருட வாகனத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

பரிவேட்டு உற்சவம்

ஜூலை 3 வியாழக்கிழமை, காலை 07 மணி முதல் 11 மணி வரை, பாா்வேட்டு மண்டபத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருள செய்யப்படுவா். பரிவேட்டு உற்சவம் காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறும்.

ஆஸ்தானம், வேத மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியில் கோயிலின் துணை தலைமை நிா்வாக அதிகாரி, வரலட்சுமி, கோபிநாத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 12 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.34 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தர... மேலும் பார்க்க

திருமலையில் 90,051 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 90,051 பக்தா்கள் தரிசித்தனா். மொத்தம் 39,058 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். மேலும், ஞாயிற்றுக்கிழமை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நி... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ.51 லட்சம் நன்கொடை

சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேவஸ்தானம் நடத்தும் ஸ்ரீ வெங்கடேஸ்வர வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ.51,00,001 நன்கொடை அளித்துள்ளது. இதற்கான வரைவோலையை தலைவரும் நிா்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திருந்தன. த... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.09 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.09 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்க... மேலும் பார்க்க