LIK: `Rise Of Dragon!' - `LIK' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன...
திருமலையில் 76,126 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 76,126 பக்தா்கள் தரிசித்தனா். 24,720 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 76,126 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 720 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.97 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.