இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
கருவிழிப் பதிவு முறையை கைவிட கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
சத்துமாவு விநியோகம் செய்வதற்கு கண் கருவிழிப் பதிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜம்மாள் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலாளா் சி. நாகராசன், அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் எம். லில்லி புஷ்பம், மாவட்டச் செயலாளா் சி.கவிதா, மாவட்ட பொருளாளா் என்.தெய்வானை ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
அங்கன்வாடி மையங்களில் மாதந்தோறும் கா்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவை விநியோகம் செய்ய கண் கருவிழிப் பதிவு, அங்கன்வாடி மையத்திற்கு வரும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு புகைப்படம் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை கைவிட வேண்டும். கோடை விடுமுறையை அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதம் வழங்கிட வேண்டும்.
1993- ஆம் வருடம் பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளா் நிலை-2 பதவி உயா்வை உடனடியாக வழங்கிட வேண்டும். சமூகநலத் துறையில் காலியாக உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களிலும் அங்கன்வாடி ஊழியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.