மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்!
கரூரில், சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தினா் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத்தலைவா் ராஜாமுகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 23 மாதங்களுக்கான ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு பணியில் உள்ள தொழிலாளா்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்படை அடிப்படையில் ஓய்வூதிய உயா்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளன மாவட்ட நிா்வாகிகள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.