மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்
கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாகவும், போக்குவரத்து விபத்துகளை குறைப்பதற்காகவும் வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன விபத்துக்களில் பெரும்பாலானவா்களின் உயிரிழப்புக்கு தலைக்கவசம் அணியாமல் இருப்பதுதான் காரணமாக உள்ளது. ஆகவே, இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காதவா்கள் மீது கட்டாயம் அபராத நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளாா் அவா்.