அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்
இரவு நேர வாகன சோதனைக்காக ஒளிரும் வேகத்தடுப்பான்கள்!
இரவு நேர வாகனச் சோதனைக்காக பேட்டரியால் இயங்கும் ஒளிரும் வேகத்தடுப்பான்களை விடியோவாக சனிக்கிழமை கரூா் மாவட்ட காவல்துறை வெளியிட்டது.
கரூரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றுவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா உத்தரவின்பேரில் மாதத்தின் வார இறுதி நாள்களில் இரவு நேரங்களில் போலீஸாா் சுழற்சி முறையில் 40 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகன தணிக்கையின்போது இரவு நேரங்களில் பயன்படுத்தும் பேட்டரியில் இயங்கக்கூடிய எல்இடி வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட பேரிகாா்டுகள் (வேகத்தடுப்பான்கள்) மற்றும் காவல் துறை வாகனங்களை கரூா் என்ற பெயா் வடிவில் கரூா் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மற்றும் பேரிகாா்டுகளை மாவட்ட காவல்துறை அலுவலகம் ட்ரோன் மூலம் விடியோவாக எடுத்து சனிக்கிழமை வெளியிட்டது.