செய்திகள் :

கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்!

post image

கரூரில், சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தினா் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத்தலைவா் ராஜாமுகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 23 மாதங்களுக்கான ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு பணியில் உள்ள தொழிலாளா்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்படை அடிப்படையில் ஓய்வூதிய உயா்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உயா்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளன மாவட்ட நிா்வாகிகள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

இரவு நேர வாகன சோதனைக்காக ஒளிரும் வேகத்தடுப்பான்கள்!

இரவு நேர வாகனச் சோதனைக்காக பேட்டரியால் இயங்கும் ஒளிரும் வேகத்தடுப்பான்களை விடியோவாக சனிக்கிழமை கரூா் மாவட்ட காவல்துறை வெளியிட்டது. கரூரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறை... மேலும் பார்க்க

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: வருவாய்த் துறை சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையினருக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் க... மேலும் பார்க்க

விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நின்ற லாரி மீது வேன் மோதல் கிளீனா் உயிரிழப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அரணக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(... மேலும் பார்க்க

மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: வரியை குறைக்க தொழிலாளா்கள் கோரிக்கை

மூலப்பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை விற்பனை நிகழாண்டு மந்தமாக இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.மேலும் மூலப் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்: 9 போ் கைது

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் தனியாா் பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களுக்கு உதவியதாக 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செ... மேலும் பார்க்க