கரூரில் ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்
கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூஜை பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.
புதன்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கரூரில் உள்ள ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் பழுதுபாா்க்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப்பணிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்றன.
தொடா்ந்து கரூா் ஜவஹா் பஜாா், உழவா்சந்தை, லைட்ஹவுஸ் காா்னா், தாந்தோணிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதப்பூஜை பொருள்களான பொரி, சிறிய பாக்கெட்டுகள் ரூ.30-க்கும், பெரிய பாக்கெட்டுகள் ரூ.50-க்கும் விற்கப்பட்டன.
மேலும், 5 கிலோ எடைகொண்ட வெண்பூசணி ரூ.40-க்கும், 7 கிலோ எடைகொண்ட பூசணி ரூ.70-க்கும் விற்கப்பட்டன. மேலும், ஒரு ஜோடி வாழைக்கன்றுகள் ரூ.50 முதல் ரூ.60-க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.80-க்கும், தேங்காய் கிலோ ரூ.80-க்கும், வாழைப்பழம் ஒரு சீப் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், ஆப்பிள் கிலோ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டன.