செய்திகள் :

'கரூரில் எனக்கு எந்த ஒரு நண்பரும் இல்லை; வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- கயாடு லோஹர் விளக்கம்

post image

"என் ஆழ்ந்த இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தவெகவின் சுயநல அரசியலுக்காக கரூர் கூட்டத்தில் நான் மிகவும் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். விஜய், மக்கள் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கான பொம்மைகள் அல்ல.

உங்கள் பேராசைக்காக இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக இருக்கிறதோ?" என்று கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடிகை கயாடு லோஹர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது போல் பதிவு ஒன்று இணையத்தில் வைரலானது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்நிலையில் அந்த எக்ஸ் தள கணக்கு போலியானது என்று கயாடு லோஹர் விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது கயாடு லோஹர் வெளியிட்டிருக்கும் பதிவில், " என் பெயரில் பதிவுகள் வெளியிட்டு வரும் அந்த எக்ஸ் தள கணக்கு போலியானது. அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அங்கே வெளியிடப்படும் கருத்துகள் என்னுடையது அல்ல.

கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இதயம் கனிந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், எனக்கு கரூரில் எந்தவொரு நண்பரும் இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். என் பெயரில் பரப்பப்படும் அந்த செய்தி முற்றிலும் தவறானது.

தயவுசெய்து அந்தத் தவறான தகவலை நம்பவோ பரப்பவோ வேண்டாம். துயரத்தில் உள்ள குடும்பங்களுக்காக என் பிரார்த்தனைகள் தொடரும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

கரூர் துயரம்: ``இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது" - நடிகர் வடிவேலு, சூரி உருக்கம்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ச... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்'' - விஜயிடம் நடிகர் விஷால் வைத்த கோரிக்கை

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``எப்படி தேற்றுவது தெரியவில்லை, கண்ணீர் முட்டுகிறது'' - சினிமா பிரபலங்கள் இரங்கல்

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

Saraswathi: இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்; சகோதரியுடன் அவரே இணைந்து தயாரிக்கிறார்

இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘போடா போடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. அடுத்தடுத்து கோலிவுட், டோல... மேலும் பார்க்க

Kalaimamani Awards: ``சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது!" - நெகிழும் விக்ரம் பிரபு

கடந்த 23-ம் தேதி 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறவிருப்பவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு உ... மேலும் பார்க்க

Kushi: ``விறுவிறு விஜய், துறுதுறு ஜோதிகா!'' - ̀குஷி' ரீ ரிலீஸ் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து

‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீஸில் அதிரடியாகக் கொண்டாடப்பட்டது. ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்குமா எனப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது. அத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் ... மேலும் பார்க்க