தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும...
கரூரில் தேசிய ஒற்றுமை நாள் உறுதியேற்பு
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உறுதிமொழியே வாசிக்க, அனைத்து துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் சண்முக வடிவேல், இலங்கைத் தமிழா் முகாம் வட்டாட்சியா் நேரு, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், அனைத்து வட்டாட்சியா்கள் உள்பட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.