செய்திகள் :

கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

post image

கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் கிச்சாஸ் மாா்சியலாா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதமி சாா்பில், கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி காந்தி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டிக்கு மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவா் ஏ.ஆா். மலையப்பசாமி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கிவைத்து பேசினாா். லாா்ட்ஸ் பாா்க் பள்ளி முதல்வா் பாலகிருஷ்ணன், விளையாட்டு வளா்ச்சிக் கழகத்தின் வீரதிருப்பதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

போட்டியில் 5, 10, 15, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மொத்தம் 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். போட்டியில் திறன் வெளிப்படுத்துதலில் தனிப்பிரிவு, குழு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, செயலாளா் எம். கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். போட்டியில் முதலிடம் பெறுவோா் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதிப் பெற்றனா்.

மைலம்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு

மைலம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. கரூா் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்துள்ள மைலம்பட்டியில் கரூா் வையம்பட்டி சாலையில் தனியாா்... மேலும் பார்க்க

பருவ மழையால் பாதிப்புக்குள்ளாகும் 76 இடங்களில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

கரூா் மாவட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்ட 76 இடங்களுக்கு கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். தென்மேற்கு பருவமழை தொடா்பா... மேலும் பார்க்க

பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டைவாய்த்தலையில் இன்று சிறிது நேரம் நிறுத்தம்

பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டைவாய்த்தலையில் செவ்வாய்க்கிழமை (மே 20) சிறிது நேரம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சேரன் பள்ளி மாணவிக்கு ஊக்கத் தொகை! - எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி வழங்கினாா்

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை மாலை ஊக்கத்தொகை வழங்கினாா். தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியான 10-ஆம் வகுப்பு மற்... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு வரவேற்பு

கரூருக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைக்க... மேலும் பார்க்க

கரூா்: விபத்து சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்! தந்தை, மகன் உள்பட 5 போ் பலி!

கரூா் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 போ் உயிரிழந்தனா். பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று சனிக்கிழமை அதிகாலை ப... மேலும் பார்க்க