Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
கரூரில் மே.1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம்
மே 1-ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று, கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் உள்ளிட்டவற்றை குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.