தமிழகத்தில் எங்கெல்லாம் போர் ஒத்திகை? தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!
கரூரில் வேளாண் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் சுமாா் 65 போ் திடீரென தங்களது கல்லூரிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் எனக் கோரி உழவா்சந்தையில் திருச்சி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கரூா் வட்டாட்சியா் குமரேசன், நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியா் மூலம் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு செல்லப்படும் என உறுதியளித்ததையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனா். மறியலால் கரூா்-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.