எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!
கரூரிா் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலைக் கண்டித்து கரூரில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜவஹா்பஜாரில் உள்ள தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்டச் செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினா்.
பின்னா் வி.பி.துரைசாமி கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் 24 பேரை இழந்து நாம் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் முதல்வா் ஸ்டாலின் கல்வியாளா்களுக்கு பாராட்டுக் கூட்டத்தை கூட்டியுள்ளாா். இதைக் கண்டிக்கிறோம். தமிழக சட்டப்பேரவை மரபுகளை மீறி, மாண்புகளை இழந்துவிட்டது. விரைவில் பாகிஸ்தான் மீது இந்தியா போா் தொடுக்கும். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவிப்பு தோ்தலுக்காக அல்ல என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில் பாஜகவினா் திரளாக பங்கேற்றனா்.