‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan...
"கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்; தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாதா?" - சீமான் கண்டனம்
கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதாக இருக்கிறது. இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும்" என்று கூறியிருந்தார்.
.webp)
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா?
தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்

மேலும், "ஏற்கனவே, ஒரிசா மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த குடிமைப்பணி அதிகாரி கார்த்திகேயபாண்டியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அவதூறு பரப்பி அவமதித்தது அம்மாநில பாஜக. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கட்சி என்று கூறிக்கொண்டு இனப்பாகுபாடு காட்டி அவமதித்த பாஜகவின் பொய் குற்றச்சாட்டிற்குச் சற்றும் குறைவில்லாதது தற்போதைய இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுமாகும்" என்றும்
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்யவேண்டும்" என்றும் அறிக்கை மூலம் கூறியிருக்கிறார் சீமான்.