இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தா...
கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக
நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய்.
அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார்.
நேற்று இரவே சென்னை திரும்பிய விஜய்யின் சென்னை நீலங்கரை இல்லத்தில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் அடுத்த சனிக்கிழமை (அக்டோபர் 4, 2025) திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்தார்.

தற்போது இந்தப் பரப்புரைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்க்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகளாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.