கரூர் நெரிசல் பலி: குடியரசுத் தலைவர் இரங்கல்!
கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்திருப்பதாவது: ‘தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமானதொரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து வேதனையடைகிறேன்.
உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெறவும் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.