செய்திகள் :

கரூர் பலி: காங். தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!

post image

கரூர் நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். அதில் மதிப்புக்கரிய பல உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களை இழந்துவாடுவோருடன் என் மனம் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வேண்டுகிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகளுடன் கைகோத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா! மத்திய அமைச்சா் பெருமிதம்

நுகா்வு நாடு என்பதில் இருந்து உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். ஒடிஸாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: பன்முக வா்த்தக அமைப்பை பிரிக்ஸ் பாதுகாக்க வேண்டும் -எஸ்.ஜெய்சங்கா்

பன்முக வா்த்தக அமைப்பை பாதுகாப்பதில் பிரிக்ஸ் முக்கியப் பங்காற்ற வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்க 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவ... மேலும் பார்க்க

லேயில் ஊரடங்கு 4 மணி நேரம் தளா்வு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போலீஸாா்

வன்முறை போராட்டத்தால் பாதிக்க லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் மூன்று நாளாக ஊரடங்கு தொடா்ந்த நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வசதியாக சனிக்கிழமை பகுதி, பகுதியாக சில மணி நேரம் க... மேலும் பார்க்க

பிஎம்டபில்யூ விபத்தில் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன்

மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பிஎம்டபில்யூ காா் விபத்து வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ககன்ப்ரீத் கௌருக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

கரூர் பலி: கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் இரங்கல்!

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்களுக்கு கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை... மேலும் பார்க்க

கரூர் பலி: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்! - அமித் ஷா

கரூர் நெரிசல் பலி விவரங்களைக் குறித்து தமிழக ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா தொலைபேசி வழியாக பேசி கேட்டறிந்தார். அப்போது அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பதாக உள... மேலும் பார்க்க