விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அ...
கரூர்: "பாஜக தன் அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது'- ஹேமா மாலினி தலைமையிலான குழு குறித்து திருமா
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில், எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு தமிழகம் வந்திருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க தன் அரசியல் விளையாட்டைத் தொங்கிவிட்டதாகவும், காங்கிரஸ் தரப்பிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தனது ட்வீட்டில் திருமாவளவன், " கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பா.ஜ.க.

கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
பா.ஜ.க-வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
எனவே, ராகுல்காந்தி இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.