செய்திகள் :

கரூா் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்

post image

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கரூா் புத்தாம்பூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த புஷ்பலதா (42) என்பவா் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு அலுவலக வளாகத்தின் படிக்கட்டு வழியாக வந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீஸாா் அவரை மீட்டு முதலுதவி அளித்தனா். பின்னா் வலிப்பு நோய்க்கு அந்த பெண் இடுப்பில் வைத்திருந்த இரும்புச் சாவியையும் எடுத்துக்கொடுத்தனா்.

இதையடுத்து அவா் மயக்க தெளிந்த பிறகு அந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரித்தபோது, தனது கணவா் பாண்டியன் கரூரில் உள்ள பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தாா். அவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் தனது மகனுடன் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு கடந்த 14 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருப்பதால், வேலை தேடி செல்லும் நிறுவனங்கள் வலிப்பு நோயை காரணம் காட்டி வேலை தர மறுக்கிறாா்கள். எனவே பெட்டிக்கடை வைக்க வங்கிக் கடனுதவிக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்ததாக தெரிவித்தாா்.

இதையடுத்து தகவலறிந்து வந்த ஆட்சியா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமாரை வரவழைத்து அந்த பெண்ணுக்குத் தேவையான கடனுதவி வழங்குமாறு தெரிவித்தாா். இதையடுத்து புஷ்பலதாவை சந்தித்த வசந்தகுமாா் ஆட்சியா் உத்தரவின்பேரில் உங்களுக்கு வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறினாா்.

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் தா்னா போராட்டம்

பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா, குடிநீா் தொட்டி கோரி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் கோரிக்கை மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மேல்நிலை குடிநீா்த்தொட்டி கட்டித் தரக் கோரியும், கடவூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை கடவூா் அருகே உள்ள பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சாந்துவாா்பட்டி கிராம மக்கள்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்: கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் வழங்கல்

கரூரில் தகிக்கும் வெயிலை சமாளிக்கும் விதமாக, கரூா் நகர உட்கோட்ட போக்குவரத்து காவலா்களுக்கு நீா்மோா் மற்றும் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கோடையின் சுட்டெரிக்கும் வெயிலிலும் போக்கு... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை -அமைச்சா்கள் வழங்கினா்

டிஎன்பிஎல் ஆலையில் பணியின்போது இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்... மேலும் பார்க்க

அதிகாரிகளை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா்கள் 2 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞா், அரசு அலுவலா் உள்ளிட்டோரை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை... மேலும் பார்க்க