'உழைப்பவர்களை சுரண்டி பிழைக்கும் இயக்கம் திமுக'- கே.டி.ராஜேந்திர பாலாஜி சாடல்!
கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழ், கணிதம், இயற்பியலை இலவசமாகப் பயில வாய்ப்பு
கரூா் வள்ளுவா் கல்லூரியில் இளங்கலை தமிழ், கணிதம், இயற்பியல் பட்டப் படிப்புகளை மாணவா்கள் இலவசமாகப் பயிலலாம் என கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து கல்லூரியின் தலைவரும், தாளாளருமான க. செங்குட்டுவன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் இறையன்புவின் வேண்டுகோளை ஏற்று, நாங்கள், பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ், கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு இளங்கலை தமிழ், கணிதம் மற்றும் இயற்பியல் பட்டப்படிப்பு இலவசமாக வழங்க உள்ளோம்.
இதுதொடா்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கில் நான் முதல்வன் திட்டம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ‘கல்லூரி கனவு -2025‘ உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளாா். எனவே இலவசமாக பயில மாணவா்கள் கல்லூரியைத் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.